நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

CHENNAI:

நவம்பர் 5 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தைப் பிரம்மாண்டமான திரையில் காண விரும்பும் ரசிகர்கள், ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான படைப்புக் குழுவினரை ஒன்றிணைத்து, காலத்தால் அழியாத ராமாயணக் கதையை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளது.

இத்திரைப்படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற இந்த இரு இசையமைப்பாளர்களும் இணைந்திருப்பது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் உலகளவில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘ராமாயணா’, இந்தியா மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களுக்கும் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்.

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 5 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

FeaturedRanbir Kapoor and Yash's Ramayana Advance Bookings NEWS
Comments (0)
Add Comment