சென்னை:
சூர்யா, நஸ்ரியா நஜிம், நஸ்லன்,ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் ,ஜோதிகா, டோவினோ தாமஸ், கஜராஜ்,சுரேஷ் மதியழகன் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “சீன்”. இப்படத்தை ஜித்து மாதவன் இயக்கியுள்ளார் .
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மத்திய குற்றப்பிரிவு போலீசில் டி எஸ் பியாக இருக்கிறார் இன்பராஜ் என்ற சூர்யா. எப்படிப்பட்ட சிக்கலான வழக்காக இருந்தாலும் சில நாட்களிலேயே குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவார். அதற்காகவே காவல்துறையில் இவருக்கென்று தனி மரியாதை இருக்கிறது. இந்த சூழலில் சூர்யாவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சைக்கோ கொலையாளி பாணியில் நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. தன்னால் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கும், தற்போது நடக்கும் கொலைகளுக்கும் எந்தவிதமான சம்மந்தம் இல்லை என்பதை கண்டுபிடிக்கும் சூர்யா, தற்போதைய கொலைகளின் பின்னணி மற்றும் குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார்.
ஆனாலும் அடுத்தடுத்து நகரில் சைக்கோ கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அதைச் செய்பவர் ஒருவரா அல்லது பலரா என்கிற சந்தேகம் வருகிறது. அந்த கொலைகளை செய்வது யார் என்பதை துப்பு துலக்க மீண்டும் இன்ப ராஜிடம் உயர் அதிகாரிகள் பொறுப்பை ஒப்படைக்க முயல்கின்றனர். ஆனால் தான் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக கூறுகிறார் இன்பராஜ் .