இப்போதைக்கு எந்த இயக்குனர் வந்து என்னை வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தாலும் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன்…நடிகர் அர்ஜுன்தாஸ்!

38

சென்னை:

தமிழ் திரை உலகில் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி இருந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டும்தான்  வெற்றி பெற முடிகிறது அப்படி வெற்றி பெற்ற நடிகர்கள் வரிசையில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் ‘கைதி’ ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘அநீதி’ என பலபடங்களில் வில்லனாக தொடர்ந்து  பல திரைப்படங்களில் ஒரு வில்லனாகவே நடிப்பதற்கு வாய்ப்புக்கள் வந்தது. ஆனாலும் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை உணர்ந்து அதில் சிறந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த ‘அநீதி’ படத்தில் மக்கள் மத்தியில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.  அதேபோல் சமீபத்தில் அவர் வில்லனாக இரட்டை வேடங்களில் அஜித் கதாநாயகனாக நடித்த குட் ‘பேட் அக்லி’ படத்தில்  தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டை பெற்றார். அப்படத்தில் அவரது சிறந்த நடிப்பு மக்கள் மத்தியில் வியக்க வைத்தது. அர்ஜுன் தாஸை பொருத்தவரையில் அவர் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று நினைத்தால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார் அப்படி தற்போது கதாநாயகனாக நடித்த ‘பாம்’ திரைப்படம் அவரது ரசிகர் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது அப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்து எந்தவித சண்டைக் காட்சிகளும் இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் சிறந்த முறையில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார் அந்த படத்தில் அவரது ‘கணீர்’ என்ற குரல் அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். ‘பாம்’  படத்தில் அர்ஜுன் தாஸ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கதையின் நாயகனாக அனைத்து ரசிகர்களும் பாராட்டும்படி நடிப்பில் அசத்திருக்கிறார். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்கியிருக்கிறார்.

இது குறித்து அர்ஜுன்தாஸ் கூறுகையில்,

தமிழ்த் திரைப்பட உலகில் என்னை ‘கைதி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில்  வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நான் என்றும் நன்றியுடன் கடமைப்பட்டிருக்கிறேன். ‘கைதி’ படத்திற்கு பிறகு பல படங்கள் என்னைத் தேடி வந்தாலும், கதையில் எனக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என்று  தேர்வு செய்துதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைத் தேடி அதிக படங்களில் வில்லனாகவே தொடர்ந்து நடிக்க வாய்ப்புக்கள் வந்தன. எனக்கு மாறுபட்ட முறையில் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது, எனது இலட்சியம் என்னவென்றால் அந்த வட்டத்திலிருந்து வெளிவந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வரும் படங்களில் நடிப்பதை விட  சமுதாய நோக்கம், அரசியல், காதல் கதை போன்ற வெவ்வேறு கதைகளம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோதுதான் ‘பாம்’ படத்தில் கதையின் நாயகனாக  நடிப்பதற்கு விஷால் வெங்கட்  என்னிடம் கதையை சொன்னார். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ‘பாம்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். பயந்த சுபாவம் உள்ள தாழ்த்தப்பட்ட இளைஞனாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் எந்தவித ஆக்சன் காட்சிகளும் இல்லை.  மணி என்ற ‘பாம்’ படத்தின் கதாபாத்திரம் எனக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட இமேஜை  உருவாக்கி நகரத்து இளைஞனாக, வில்லனாக மட்டுமே நடிக்க முடியும் என்ற ஒரு தோற்றத்தை,  இந்த கதாபாத்திரம் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

எந்த கதாபாத்திரத்தையும் உணர்ந்து என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை என் மனதில் இந்த ‘பாம்’ படம் மூலம் உருவாகி இருக்கிறது. அந்த நம்பிக்கை இயக்குனர் விஷால் வெங்கட்டுக்கும் வந்து இர்ருந்ததால் என்னை அழைத்து ‘பாம்’ படத்தில் நடிக்க வைத்ததற்கு என்றும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.. இந்த படத்திற்க்கு பிறகு எனக்கு நிறைய கிராமத்து சம்பந்தப்பட்ட பின்னணியில் அமைந்த கதாபாத்திரங்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிக்கிறேன். இப்போதைக்கு எந்த இயக்குனர் வந்து என்னை வில்லன் வேடத்தில் நடிக்க அழைத்தாலும் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்க அழைத்தால் மட்டும் கண்டிப்பாக நடிப்பேன்.’ குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நான் நடித்தேன் என்றால் அது அஜீத் சாருக்காகத் தான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.  நான் ஆரம்ப காலகட்டத்தில் பலவித கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் படிப்படியாக முன்னேறி இந்தத் துறையில் சிறிதளவு வெற்றி பெற்று வந்திருக்கிறேன். என்னை இந்த அளவுக்கு உயர்த்திய பத்திரிக்கையாளர்களுக்கும், என் ரசிகர்களுக்கும் என்னை ஆதரித்த என் குடும்பத்தினருக்கும் நான் எப்போதும்  நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு சொன்ன அர்ஜுன் தாஸ் தனது பேட்டியை முடித்துக் கொண்டு “சென்னைசுடர்’ வெப் சைட்டை பார்த்து பாராட்டி நன்றி கூறினார்.

RADHAPANDIAN.