சென்னை:
ராம் பிலிம் ஃபேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துஆனந்த் ஜி வழங்கும் டிரெண்டிங் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். இப்படத்தில் கலையரசன், பிரியாலையா, பிரேம் குமார், பெசன்ட் ரவி,வித்யா போர்கியா, சிவன்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சிறிய கதாபாத்திரம் என்றாலும் பிரேம் குமாரின் நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. மற்றும் பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒரே வீட்டில் நடக்கும் கதைக்களம் என்றாலும் அதை வைத்துக் கொண்டு காட்சிகளில் வேறுபாடு காட்டி பட்த்தை மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்., பின்னணி இசையும் படத்தின் பல காட்சிகளில் அதிக சத்தம் இல்லாமல் பலம் சேர்த்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
யூடியூப் உட்பட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் இதற்கான பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் உள்ள பலரும் யூடியூபில் தங்கள் மானம் மரியாதை மறந்து பணம் சம்பாதிப்பதற்காக எப்படி எல்லாம் தரக் குறைவாக ஈடுபடுகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இயக்குனர். சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் யூடியூப் சேனல் மூலம் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ்.
மொத்தத்தில், ‘டிரெண்டிங்’ படம் அனைவரும் ரசிக்கக் கூடிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.
|
|