Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!
CHENNAI:
‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பொன் ராம், தேசிங் பெரியசாமி, சுரேஷ், கார்த்திக் வேணுகோபாலன், ஹரிஹரன் ராம், கலையரசன் தங்கவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில்,
இயக்குநர் தேசிங் பெரியசாமி பேசுகையில்,
இயக்குநர் இளன் பேசுகையில்,
இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் பொன் ராம் பேசுகையில்,
இந்தப் படத்தில் இருக்கும் ‘கிஸா’ சாங் எனக்கு மிகவும் பிடிக்கும். மார்ச் 14ஆம் தேதி வெளியாகும் இந்த படம் ஸ்யூர் ஹிட். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
புது இயக்குநர்களுக்கு யுவன் சங்கர் ராஜா வாய்ப்பளிப்பதை நான் வரவேற்கிறேன். புது இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு நம்பிக்கை அதிகம் வேண்டும். இதற்காகவும் யுவன் சங்கர் ராஜாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில்,
இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசுகையில்,
இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் பேசுகையில்,
இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 வது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர். அனைவரும் சொல்வது போல் நானும் யுவனின் பாடல்களை கேட்டு தான் வளர்ந்தேன். நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்றாவது ஒருநாள் அவரை நேரில் சந்தித்து விட மாட்டோமா..! என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறேன். அவருடைய இசை மற்றும் தயாரிப்பில் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால்… அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்த படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதை புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ” என்றார்.
நடிகை கோபிகா ரமேஷ் பேசுகையில்,
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில்,
ஸ்வீட்ஹார்ட் மார்ச் 14ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இது ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம். இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாக சொல்வேன். இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றி நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஸ்வீட்ஹார்ட்’ அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக இருக்கும். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,